மத்திய அரசு இதுவரையிலும் அமைதி காப்பது வெட்கக்கேடானது-பிரியங்கா காந்தி
டெல்லி, பிப்ரவரி-26
டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நிலவும் வன்முறைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி இன்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். தொண்டர்களுடன் அவர் பேரணியில் நடந்து சென்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு இதுவரையிலும் அமைதிகாப்பது வெட்கக்கேடானது. வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அமைதி காக்கவும் வேண்டுகோள் விடுக்கிறேன். உ.பி., மாநிலத்தில் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் அமைதியை நிலைநாட்ட காங்., நிர்வாகிகளிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.