டெல்லி வன்முறை: பா.ஜ.க. தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

டெல்லி, பிப்ரவரி-26

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பான வழக்கில், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியது தொடர்பாக நீதிபதியிடம் 3 விடியோக்கள் காண்பிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், உத்தரவிட்ட நீதிபதி, பாஜக தலைவர்கள் மூன்று பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யுமாறும், இந்த மூன்று விடியோக்கள் மட்டுமல்லாமல் வன்முறை தொடர்பான மேலும் விடியோக்கள் கிடைத்தால் அதை அடிப்படையாக வைத்தும் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சட்டத்தை காக்கும் பணியை காவல்துறையினர் எந்த பயமும், அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

எஃப்ஐஆர் பதிவு செய்வதில் காட்டப்படும் தாமதம், மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *