அந்த கிரேன் என் மீது விழுந்திருக்கலாம்: இந்தியன்-2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் உருக்கம்

சென்னை, பிப்ரவரி-26

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் அந்த மூன்று பேருக்கு பதில் கிரேன் என் மீது விழுந்திருக்கலாம் என்று இயக்குநர் ஷங்கர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு திரையுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து இயக்குநர் ஷங்கர் இன்று ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டரில்: மிகுந்த மனவேதனையுடன் நான் ட்வீட் செய்கிறேன். அந்த விபத்து நடந்ததில் இருந்து நான் அதிர்ச்சியில் உள்ளேன். என் உதவி இயக்குநர் உள்ளிட்டோர் இழப்பால் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். கிரேனில் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸானதற்கு பதில் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் ட்வீட்டை பார்த்தவர்கள், கிரேன் உங்கள் மீது விழுந்திருக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்தே உங்களின் நல்ல மனசு தெரிகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த உங்களால் அவ்வளவு சீக்கிரம் அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாது தான். மனதை தேற்றிக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *