இஸ்லாமியர்களை தொடவேண்டும் என்றால் முதலில் எங்களை தொட வேண்டும்-சீமான்

சென்னை, பிப்ரவரி-26

இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை, தமிழர்கள் நாங்கள் தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள். சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது, டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். சனநாயக வழியிலான அமைதியான அறப்போராட்டத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்கள். கை கால்களோடு மட்டுமல்ல வாளோடும், வேலோடும் முன்தோன்றிய மூத்தக்குடியின் மக்கள் நாங்கள்!!

நினைத்ததையெல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வடநாடு அல்ல, தமிழ்நாடு! எங்களது பெருந்தன்மையும், பொறுமையும்தான் உங்களது இருப்பை நிலைகொள்ள செய்திருக்கிறது!

இங்கிருக்கும் இசுலாமிய சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்களல்ல, காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வக்குடிகள்!! எங்கள் உடன்பிறந்தவர்கள்; எங்களது இரத்த உறவுகள்!! இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை.

தமிழர்கள் நாங்கள் தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம். அவர்களை தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்குமுன் எங்களை எதிர்கொள்ள வேண்டும். எங்களைத் தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும்! கவனம்! நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு!! இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா?!! இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *