1984-ல் நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு சம்பவத்தை உருவாக்கி விடக்கூடாது

டெல்லி, பிப்ரவரி-26

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறியது. மூன்று நாட்களாக நடந்த இந்த வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.

டெல்லி வன்முறை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் போது டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி எழுப்பியது 

மேலும், இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது: 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்தது போல் மீண்டும் ஒரு சம்பவத்தை உருவாக்கி விடக்கூடாது. பன் முகத்தன்மை கொண்ட நாட்டில் இதுபோன்ற வன்முறையை மீண்டும் அனுமதிக்கக்கூடாது. நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயலற்ற வேண்டும். டெல்லியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை கைது செய்யாதது ஏன்?

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிக்கு ஹெல்ப்லைன் அமைக்கவும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக அனுப்ப தனியார் ஆம்புலன்ஸ்கள் வழங்கவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அடிப்படை வசதிகளுடன் மறுவாழ்வுக்கான முகாம்களை அமைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *