தமிழ் புத்தாண்டு அன்று ரஜினி கட்சியை அறிவிப்பார்-சத்திய நாராயணராவ்
கிருஷ்ணகிரி, பிப்ரவரி-26
நடிகர் ரஜினிகாந்தின் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என்று அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டில் கட்சியை அறிவிப்பார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவது குறித்து ரஜினி முடிவு செய்வார். மத்தியில் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார். அமெரிக்க அதிபர் இந்திய வருகையின்போது எதிர்க்கட்சிகள் தூண்டுதலால் டெல்லியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. கூட்டணி குறித்து ரஜினியே முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.