தேமுதிகவுக்கு எம்.பி. பதவி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் – எடப்பாடி பழனிசாமி

திருச்சி, பிப்ரவரி-26

காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நாங்கள் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டோம். கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது என்.பி.ஆர் சட்டத்தை நடைமுறை படுத்தினார்கள்.

அதில் தற்போது கூடுதலாக 3 அம்சங்களாக மொழி, பெற்றோர்கள் பிறந்த இடம் மற்றும் ஆதார் இணைப்பு என மத்திய அரசு சேர்த்து இருக்கிறது. இவை அனைத்தும் கட்டாயம் கிடையாது, எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை என்று தெளிவுப்படுத்தி விட்டனர்

மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்க கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி தருவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும். சி.ஏ.ஏ விற்கு எதிரான தீர்மானம் தமிழக அரசு பரிசீலனையில் உள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *