முக்கொம்பு தடுப்பணை கட்டுமான பணி 2021 ஜனவரியில் நிறைவடையும்-முதல்வர் பழனிசாமி

திருச்சி, பிப்ரவரி-26

காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  சுமார் 387.60 கோடி செலவில் புதிய கதவணை கட்டுமானப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 35 சதவீத பணிகள் நிறைவுப்பெற்றன.  எஞ்சிய பணிகள் 2021 ஜனவரியில் நிறைவடையும்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிட்டது. காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை கூறிவிட்டது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.

வேளாண் துறையில் மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மேலும் திருச்சி, அரியலூர், கரூர் போன்ற மாவட்டங்களில் நிறைய தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் இந்த நிறுவனங்களை செயல்படுத்த முடியாது. ஆகவே இதில் எந்த மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதோ அந்த மாவட்டங்களை ஆய்வின் மூலமாக குறிப்பிட்ட பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *