விடுமுறை நாட்களில் பண்பாடு, கலாச்சார வகுப்புகள்-அமைச்சர்
சென்னை, செப்டம்பர்-26
விடுமுறை நாட்களில் ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக பள்ளிகளில் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒவ்வொரு துறையிலும், இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் பாடம் நடத்தும் திட்டம், அடுத்த மாத இறுதிக்குள் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் தமிழ் ஆசிரியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை தொடர்பாக அந்த மாநில முதலமைச்சர், தங்களுக்கு கடிதம் எழுதினால் ஆலோசிக்கப்படும் என்றார்.

நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்படிப்புக்கு அனுப்புவது, மருத்துவத் துறையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் ஆளுகைக்கு உட்பட்டது. அவர்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் குறித்துப் பதிலளிக்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.