அம்மா ஐஏஎஸ் அகாடமி சார்பில் நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை, பிப்ரவரி-26

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’ பயிற்சி மையத்தின் சார்பில் சென்னை மற்றும் கோவையில் இலவச நேர்முக தேர்வு பயிற்சி அளிக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ஐஏஎஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு நேர்முக தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சி அளிக்க அம்மா ஐஏஎஸ் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய தேர்வாணையம், குடிமைப் பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில்  முதன்மை தேர்வில் தகுதி பெற்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு, ‘அம்மா ஐஏஎஸ் அகாடமி’ பயிற்சி மையத்தின் சார்பில், சென்னை மற்றும் கோவையில் மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் ஆளுமை தேர்வும், ஒரு நாள் சிறப்பு வகுப்பும் நடத்தப்படவுள்ளது.

மாதிரி ஆளுமை தேர்வு பற்றிய மேலும் விபரங்களை அறிந்துகொள்ள www.ammaiasacademy.com என்ற இணையதளத்திலும், 0422 – 2472222 என்ற தொலைபேசி எண்ணிலும், 87606 74444 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *