மார்ச்.9-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை, பிப்ரவரி-26

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீணடும் கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி கூடியது. அன்றைய தினம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து 20-ந் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.

கடைசி நாளில் முதல்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மார்ச் 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது என்றும், இந்த கூட்டத்தொடரில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேரவைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை மார்ச் திங்கள் 9-ம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவை தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *