கர்நாடகாவில் அரசு பேருந்து கட்டணம் 12% உயர்வு

பெங்களூரு, பிப்ரவரி-26

கர்நாடகத்தில் அரசு பேருந்து கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே நடைமுறைக்கு வந்தது.

ஆனால் பெங்களூருவில் கட்டணம் உயர்த்தப்படவில்லை, காரணம் ஏற்கெனவே நெரிசலாக காணப்படும் பெங்களூரு போக்குவரத்தில் கட்டண உயர்வினால் மேலும் தனியார் வாகனங்கள் அதிகம் சாலைகளுக்குள் வர வாய்ப்பிருப்பதாக கருதி நகர பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை.

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 25 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து கழகங்கள், பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில் அரசு பேருந்து கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது.

பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்துகளை இயக்கும் செலவுகள் அதிகரிப்பதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *