பீகாரில் என்.ஆர்.சி இல்லை : சட்டமன்றத்தில் தீர்மானம்

பாட்னா.பிப்ரவரி.25

பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவேடான என்.ஆர்.சி.யை செயல்படுத்த போவதில்லை  என்று  சட்டப்பேரவையில்  ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகார் முதலமைச்சல் நிதிஷ்குமார் என்.ஆர்.சி சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தார். தேசிய மக்கள்தொகை பதிவு ,என்.பி.ஆர் 2010 நடைமுறையை பின்பற்றி செயல்படுத்த வேண்டும் என்று  தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து ‘சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை’ தவிர்க்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசுக்கு பீகார் மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *