புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்

சென்னை, செப்டம்பர்-26

உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில், 7 ஆயிரத்து 175 கோடி ரூபாய் மதிப்பிலான 5 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 

இந்த ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், 3 லட்சத்து 441 கோடி ரூபாய் அளவுக்கு 309 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த ஒப்பந்தங்களின் திட்ட தொடக்க விழா தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட படி நிறுவப்பட்ட 3 ஆலைகளின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

பின்னர் 15 புதிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அந்த நிறுவனங்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஒப்பந்தங்களை பரிமாறி கொள்ளப்பட்டன. இதையடுத்து டி.சி.எஸ்., ஸ்க்விங் ஷெட்டெர், ஜப்பானின் நிஸ்ஸெய், கொரியாவின் யங்க்வா, ஜெர்மனியின் மாஹ்லே ஆகிய நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்

7 ஆயிரத்து 175 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையும் இந்த புதிய தொழில் திட்டங்கள் மூலம், 45 ஆயிரத்து 846 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *