எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்திய அகாதமி விருது

டெல்லி.பிப்ரவரி.25

இலக்கியத்துறையில்  சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கு சாகித்திய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது, நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற  மொழி பெயர்ப்பு புதினத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. 

கணவருடன் ஜெயஸ்ரீ

குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய ”நிலம் பூத்து மலர்ன்ன நாள்” எனும் நாவலை, தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்தமைக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில்  பள்ளி ஆசிரியராக பணிபுரியும் கே.வி.ஜெயஸ்ரீ. கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். எனினும் அவர்  படித்தது, வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலையில்தான். அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமார் இவரது கணவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *