370 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை, செப்டம்பர்-26

சென்னை தலைமை செயலகத்தில் 370 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 109 கோடி ரூபாய் மதிப்பில் 370 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் 1,314 கோடி ரூபாய் செலவில் 4,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளின் அடிப்படையில் இதுவரை 4,751 புதிய பேருந்துகள் 1,423 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் தொடங்கி வைத்த 370 பேருந்துகளில், கோவை, விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *