தலைவர் 168-ன் டைட்டில் வெளியானது… ”அண்ணாத்த” யாக கலக்க வருகிறார் ரஜினி!!!

சென்னை, பிப்ரவரி-24

ரஜினி நடிப்பில், சிவா இயக்கி வரும் தலைவர் 168 படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு இரண்டு பெயர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் ஒன்று அண்ணாத்த மற்றொன்று மன்னவன்.

ரஜினி ஏற்கனவே மன்னன் எனும் பெயரில் படம் நடித்திருப்பதால், மன்னவன் பெயரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. எனவே இந்த படத்தின் பெயரான அண்ணாத்த’ வை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் ரஜினியுடன், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *