டீ விற்றவர் நாட்டின் பிரதமராக இருக்கிறார்… மோடி கடின உழைப்பாளி-அதிபர் ட்ரம்ப் புகழாரம்

அகமதாபாத், பிப்ரவரி-24

அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர் என நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டொனால்டு டிர்மப் மோடியை புகழ்ந்து பேசினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.

டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். மூன்று தீண்டாமை குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.  காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப்.  

பின்னர் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு வந்தடைந்தார் அதிபர் டிரம்ப்.  அவர்கள் வந்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். 

சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் நமஸ்தே என தனது பேச்சை தொடங்கினார். அவர் கூறியதாவது:-

5 மாதங்களுக்கு முன்பு டெக்சாஸில் உள்ள ஒரு மாபெரும் கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா உங்கள் மாபெரும் பிரதமரை வரவேற்றது. இன்று இந்தியா அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் எங்களை வரவேற்கிறது.

இந்த விருந்தோம்பலை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். இந்தியா நம் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தை் பிடிக்கும். இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்க திகழும்

பிரதமர் மோடி ‘டீ வாலா ‘ என்று தொடங்கினார். அவர் தேநீர் விற்பனையாளராக பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள், ஆனால் இதை நான் உங்களுக்கு சொல்வேன், அவர் மிகவும் கடினமானவர். அன்று டீ விற்றவர், இன்று நாட்டின் பிரதமர்.

பிரதமர் மோடி நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டும் அல்ல, கடின உழைப்பு மற்றும் பக்தியால், இந்தியர்கள் எதையும், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக வாழ்கிறீர்கள். பிரதமர் நம்பமுடியாத எழுச்சியின் நகரும் கதை ஆகும்.

இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவும் பகலும் உழைக்கிறார். இணையதளம், சமையல் எரிவாயு இணைப்பை நாடு முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் பிரதமர் மோடி என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *