மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது ராஜினாமா!!!

கோலாலம்பூர், பிப்ரவரி-24

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் முகமது ஆவார். 2003-ல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற மகாதீர் 2018-ல் மீண்டும் மலேசியப் பிரதமானார். கடந்த 2018ல் இவர் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது.

மகாதீர் முகமது மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் அந்நாட்டின் அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.  ஆனால் இந்த கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்த நிலையில்,  திடீர் திருப்பமாக மகாதீர் முகமது பதவி விலகி இருக்கிறார். மகாதீர் முகமது சத்தியத்தை மீறிவிட்டார் என்று அன்வர் புகார் கொடுத்த சில மணி நேரங்களில் மகாதீர் முகமது பதவி விலகி இருக்கிறார். இதனால் அங்கு அன்வர் பிரதமர் ஆவாரா அல்லது அங்கு மீண்டும் தேர்தல் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மலேசிய அரசியலில் இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *