சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்றிய டிரம்ப், மெலானியா டிரம்ப்

அகமதாபாத், பிப்ரவரி-24

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் இருவரும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்புடன் தனி விமானத்தில் 11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார்.  அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். அகமதாபாத் விமான நிலையத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அதிபர் ட்ரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் 22 கி.மீ. தொலைவுக்கு மாபெரும் வரவேற்புகளுடன் சாலை மார்க்கமான பயணித்தனர். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமெரிக்க அதிபராக டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

இதற்கிடையில், சபர்மதி ஆசிரமத்தை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பார்வையிட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய மூவரும், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு ஆசிரமத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் டிரம்ப், மெலனியா டிரம்ப்பும் கையெழுத்திட்டனர். அதிபர் டிரம்ப், மெலனியாவுக்கு சபர்மதி ஆசிரமத்தை பிரதமர் மோடி சுற்றிக் காண்பித்தார்.

அதனை தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் நூல் நூற்றி சுற்றிப்பார்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *