வணக்கம் ட்ரம்ப்… இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்… மோடி வரவேற்றார்

அகமதாபாத், பிப்ரவரி-24

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியா டிரம்புடன் தனி விமானத்தில் 11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது வருகையை ஒட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தடைந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். அகமதாபாத் விமான நிலையத்திலும் டிரம்ப்பை வரவேற்கும் விதத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் வரை அமெரிக்கா அதிபர் டிரம்ப் காரில் சென்றார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *