ஜெயலலிதா சிலைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை

சென்னை, பிப்ரவரி-24

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதாவின் பிறந்தநாளையொட்டி சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயல‌லிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தலைமை செயலகம் அருகே 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ‘மகிழம்’ மரத்தை நட்டு தொடங்கி வைத்தார். மேலும், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயல‌லிதா சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிம்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மலர் வெளியிடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விழா மலரை வெளியிட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *