மீண்டும் குறையுமா தங்கம் விலை? இன்று மட்டும் 360 ரூபாய் குறைவு
சென்னை, செப்டம்பர்-26
தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் கிடு கிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு கட்டத்தில், சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையானது. வரலாறு காணாத விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்வதும், பின்னர் மீண்டும் சரிவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 28 ஆயிரத்துக்கு 776 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 45 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 597 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 1 ரூபாய் 70 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரத்து 700 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.