ட்ரம்பை வரவேற்க அகமதாபாத் வந்தார் பிரதமர் மோடி

அகமதாபாத், பிப்ரவரி-24

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்க பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்தார்.

அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அகமதாபாத் வந்தடைந்தார். அவருக்கு குஜராத் மாநில அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்நது அவர் ட்ரம்ப் வருகைக்கான ஏற்பாடு தொடர்பாக முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மத்திய, மாநில அரசு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக 22 கி.மீ.தொலைவுக்கு மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறார். அந்த ஆசிரமத்தை அவர் சுற்றி பார்க்க உள்ளார். ஆசிரமத்தை ஒட்டியுள்ள சபர்மதி கரையில் மேடை அமைக்கப்பட்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா, பிரதமர் மோடிக்காக 3 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு செல்கிறார். அங்கு அவரை வரவேற்று ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *