கமல் மீதான மோசடி புகாரும்… மறுப்பும்…

சென்னை, செப்டம்பர்-26

கமலஹாசன் தன்னை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த புகாருக்கு, கமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி என இரண்டிலும் விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார். இதனால், கமலின் அரசியல் செயல்பாடுகள் சற்று குறைந்துகொண்டே வருகிறது என்றுகூட கூறலாம்.  

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டபோது, கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்று இந்நாள் வரை தனது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல்ராஜா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, தாம் பணம் வாங்கியது உண்மை இல்லை என்றும், படத்தில் நடிப்பதாக எந்த ஒரு உத்திரவாதமும் கொடுக்கவில்லை என கமலஹாசன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *