சிறப்பு வேளாண் மண்டலம்: பாராட்ட மனமில்லாத திமுக தேவையிலாத கருத்தை பரப்புகிறது-ஜெயக்குமார்

சென்னை, பிப்ரவரி-22

சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி அரசு மேல்நிலை பள்ளியின் ஆண்டு விழா, விளையாட்டு விழா, இலக்கியமன்ற விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: 7 பேர் விடுதலையில் மாநில அரசின் நிலை என்பது முன்னரே ஜெயலலிதா எடுத்த நிலை தான்.

உச்சநீதிமன்றம் மாநில அரசே முடிவு செய்யலாம் எனக்கூறிவிட்டது, அதை தான் அமைச்சரவை செய்தது. இது தமிழக அரசின் உணர்வு.

பலமுறை ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம். எங்களை பொறுத்தவரை 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நளினியை தவிர பிறரை விடுதலை செய்யக்கூடாது என கடிதம் எழுதினார் ஆனால் இப்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸை பொறுத்தவரை மாறுபட்ட கருத்துகள் உள்ளது.

நொச்சிக்குப்பம் மீனவர்கள் வாழ்வாதாரம் அந்த பகுதியை சார்ந்து இருப்பதால் மக்களுக்கு இடையூறு இன்றி அதே இடத்தில் கடைகள் அமைத்து தரப்படும்.

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்ததில் திமுக அரசியல் செய்கிறது. இதை எற்றுக்கொள்ள மனம் இல்லாமல் தவறான கருத்தை திமுக முன்வைக்கிறது. இதற்கான விளைவு 2021 தேர்தலில் திமுக அறுவடை செய்யும் டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு கிடைக்காது.

பெரம்பலூர் போன்ற மாவட்டங்கள் தொழில் வளம் நிறைந்த மாவட்டம் என்பதால்தான் சிறப்பு வேளான் மண்டல பட்டியலில் விடுபட்டன.

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசி இஸ்லாமியர்களிடம் நண்பர்கள் போல் திமுக நடிக்கிறது. ஊழலுக்கு பெயர்போன ஊற்றுக்கண் திமுக, குடிப்பதற்கும், ஊழல் செய்வதற்கும் அராஜகம் செய்ய கற்றுக்கொடுத்த கட்சி திமுக. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *