டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

திருச்செந்தூர், பிப்ரவரி-22

திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்காக, திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு , அதே ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நடைபெற்ற கோலாகல விழாவில், மணிமண்டபம் கட்டுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின.

கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்து, சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார். 

மேலும், தூத்துக்குடி மாவட்ட புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டசபை துணை சபாநாயகர், அரசு தலைமை கொறடா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, எம்.பி., எம்.எல். ஏ.க்கள், வாரிய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *