பிரதமர் மோடி-மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு

டெல்லி, பிப்ரவரி-21

பரபரப்பான அரசியல் சூழலில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை அவரது டெல்லி இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். தற்போது என்.ஆர்.சி., என்.பி.ஆர்., சிஏஏ, ஆகியவற்றில் இந்த 3 கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதேபோன்று எல்கார் பரிஷத் வழக்கு மற்றும், கொரிகாவோன்-பிமா வன்முறை சம்பவங்களிலும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. 

இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரேயுன் உடனிருந்தார்.

கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிளுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி செய்துவரும் நிலையில் மோடியுடனான உத்தவின் சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உத்தவ் தாக்கரேயும், ஆதித்ய தாக்கரேயும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *