மொழி பாதுகாப்பே இனப் பாதுகாப்பு, தாய்மொழியை போற்றுவோம்-மு.க.ஸ்டாலின்

சென்னை, பிப்ரவரி-21

மொழிப்பாதுகாப்பே இனப்பாதுகாப்பு, தாய்மொழியை போற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளை போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்து தாய்மொழிகளை பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகின்றது.

உலகில் உள்ள அனைத்து மக்களின் மொழி உரிமையை பாதுகாக்கவே 1999-ம் ஆண்டில், 21 பிப்ரவரியை சர்வதேச தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ அறிவித்தது.

இந்நிலையில் உலக தாய்மொழி தினத்தையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’, ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என சொல்லி வளர்ந்தது தமிழினம்! தாய்மொழியே நம் உணர்ச்சி! எழுச்சி! வளர்ச்சி! மொழிப்பாதுகாப்பே இனப் பாதுகாப்பு, தாய்மொழி போற்றுவோம்! அனைவருக்கும் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *