மகளிர் டி20 உலக கோப்பை: முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

சிட்னி, பிப்ரவரி-21

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிா் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்றது. இதில், இந்திய அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் ஓவரில் மட்டும் நிதானமாக விளையாடிய இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்து அசத்தியது. அதன்பிறகு இந்திய அணி தடுமாற, இறுதியில், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸி அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது.  தனது 2-வது ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் இந்திய வீராங்கனை பூணம் யாதவ். 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றியடைந்துள்ளது. பூணம் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *