நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம் – கே.எஸ்.அழகிரி
சென்னை, பிப்ரவரி-21
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாநில் அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு அறிவிப்புகளை போல் இதுவும் ஒரு அறிவிப்பாகத்தான் இருக்கும். விவசாயிகள் பயிர் காப்பீட்டு மானியம் 50 சதவீத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்துள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது.
ஏழு தமிழர் விடுதலை நீதிமன்றம் தான் மன்னிக்க வேண்டும்; அரசியல் கட்சிகள் இல்லை. மன்னிப்பு பற்றி பேசுபவர்கள் வீட்டில் கொலை நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா? இவர்களை விடுவித்தால், சிறையில் 25 ஆண்டுகள் இருக்கும் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும். மற்ற அரசியல் கட்சிகள் மன்னிப்பு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்ற தீர்பை ஏற்றுக்கொள்கிறோம்.
சி.ஏ.ஏ. போராட்டம் அமைதியாக நடக்கிறது. ஆனால் போராட்டக்காரர்கள் மீது வன்முறையாளர்கள் என முத்திரை குத்தப்படுகிறது.
ரஜினிக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் கருத்து கூறவில்லை. பொதுவாக தான் சொன்னேன். ரஜினிக்கு சலுகை வழங்கியதை போல், விஜய் 24 மணி நேர அவகாசம் வழங்காது ஏன்? விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என அழைக்கவில்லை.
அந்த அதிகாரம் எல்லாம் கட்சியின் மேலிடத்திற்கு தான் உள்ளது. டிரம்ப் என்ற புதிய வித்தைக்காரரை மோடி அழைத்து வருகிறார். அது, தலையில் இருக்குது தாழ்ம்பூ உள்ளே இருப்பது ஈறும், பேனும் போன்ற கதை தான். சுப்பிரமணிய சாமி பேசுவது திரைப்படங்களில் வடிவேலு பேசுவதை போல் தான் உள்ளது. இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.