இந்தியன் – 2 படத்திலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விலகல்

செப்டம்பர்-25

கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து விலகியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சமீபத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள ஐஸ்வர்யா ராஜேசும் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த நிலையில், தாம் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து தாம் விலகிவிட்டதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2வில் நடிப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால், தற்போது படபிடிப்பு தாமதமாக ஆகஸ்ட் மாதத்தில் துவங்கியதாகவும், இதன் காரணமாக இந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *