புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை-சவரனுக்கு ரூ. 32,096-க்கு விற்பனை

சென்னை, பிப்ரவரி-21

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4 ஆயிரத்தை கடந்து சவரன் ரூ.32 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000-ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392-ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது.

ஆனால், நேற்று மீண்டும் சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,626 டாலரை தொட்டதை அடுத்து சென்னையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32,096-க்கு விற்பனை ஆகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.34 உயர்ந்து ரூ.4,012-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை கண்டுள்ளது. அதே போல் வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *