தூக்கு தண்டனையை நிறுத்த முயற்சி: நிர்பயா குற்றவாளி வினய் சர்மா புதிய மனுதாக்கல்

டெல்லி, பிப்ரவரி-20

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்துவருகிறது. இந்த நிலையில், குற்றவாளி வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வினய் குமார் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார்.

வினய் குமாரால் தனது தாயை கூட அடையாளம் காண முடியவில்லை. தீவிரமான மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். மூத்த உளவியல் நிபுணரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையை தள்ளிப்போட குற்றவாளிகள் புதிய யுக்தி செய்வதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *