தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு – சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை, பிப்ரவரி-20

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் இன்று ஒத்திவைத்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில், துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 17-ல் மீண்டும் கூட்டத்தொடர் தொடங்கியது. பின்னர் பட்ஜெட் மீது பொது விவாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு 4 நாட்கள் பரபரப்பாக நடந்த பட்ஜட் கூட்டத் தொடர் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *