ரவுடி கொல்லப்பட்டது ஏன்? மனித உரிமை ஆணையம் அரசுக்கு நோட்டீஸ்

சென்னை, செப்டம்பர்-25

சென்னையில் பிரபல ரவுடி மணிகண்டன் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை கொரட்டூரில் பதுங்கியிருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த தேடப்பட்டு வந்த குற்றவாளியான மணிகண்டனை பிடிப்பதற்காக விழுப்புரம் போலீஸார் சென்னை வந்தனர். மணிகண்டனின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். தப்பிக்க வழியில்லாமல் தள்ளாடிய மணிகண்டன் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து அவரை பிடிக்கச் சென்ற காவல் ஆய்வாளரை தாக்கியுள்ளார். அருகில் இருந்த மற்றொரு காவல் ஆய்வாளர் பிரகாஷ் ரவுடி மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.

இந்த என்கவுண்டர் காவல் ஆய்வாளர்களின் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஏற்கனவே காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

குற்றவாளியை என்கவுண்டரில் கொலை செய்தது ஏன் என கேள்வியும் எழுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *