பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா: பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை, பிப்ரவரி-20

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற வகை செய்யும் சட்ட முன் மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மாசோதாவை தாக்கல் செய்து முதலமைச்சர் பேசியதாவது: ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

சட்ட முன்வடிவு மூலமாக, ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது

ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும், விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இந்த சட்டத்தின் கீழ் வருகிறது.

காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கும், அதேபோன்று அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த தடை பொருந்தும். 

அதுமட்டுமின்றி, இதற்காக தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் எனவும் இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் என்றும் கூறினார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் வரும். இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்கள் தொடங்கினால் தண்டனை அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களுக்கு பாதிப்பில்லை. இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் தண்டனை வழங்கப்படும். துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் பாதிக்காது. என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *