ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் விவகாரம்: விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்-சபாநாயகர் தனபால்

சென்னை, பிப்ரவரி-20

ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று சபாநயகர் தனபால் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சபாநாயகர் உரிய முடிவெடுப்பார் என கூறி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என்றும், சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்றார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர், தமது பரிசீலனையில் உள்ள விஷயத்தை சட்டப்பேரவையில் பேச முடியாது என விளக்கம் அளித்தார். மேலும் பேசிய அவர், 11 எம்.எல்.ஏக்கள் விவகாரம் என்னுடைய ஆய்வில் உள்ளது. என்னை யாரும் வற்புறுத்த முடியாது. ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *