அவிநாசி விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

சென்னை, பிப்ரவரி-20

அவிநாசியில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடியின் அலுவலக ட்விட்டர் பக்க பதிவில் கூறியுள்ளதாவது: ‘‘தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்த தகவலையறிந்து மிகுந்த துயரமடைந்தேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்திக்கிறேன். ’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *