கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சென்னை, பிப்ரவரி-19
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் ஜகமே தந்திரம். தனுஷ் ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாகவே இந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று காலை முதலே தனுஷ் 40 பர்ஸ்ட் லுக்கான பல ஹேஸ்டேக்களை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர்.
பேட்ட படத்தைப் போலவே இதிலும் ஹீரோவுக்கு இரண்டு விதமான கெட்டப்கள் இருக்கின்றன. இந்தப் படத்தின் தமிழக உரிமையை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.