கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு: முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்ரவரி-19

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

கீழடியில் கடந்த 2018-ம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. முதல் 3 கட்ட அகழாய்வு பணியினை மத்திய தொல்லியல் துறையினர் நடத்தினர். 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக தொல்லியல் துறை நடத்தியது.

மத்திய அரசு கண்டெடுத்த அகழாய்வு பொருட்களை வைத்து பெங்களூருவில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு கண்டெடுத்த பொருட்கள் மதுரை தமிழ்ச்சங்கத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணியினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பெருமக்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர். இந்த அகழாய்வு பணி இரண்டு ஏக்கர் இடத்தில் தொடங்கவிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *