உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
டெல்லி, பிப்ரவரி-19
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற பதவியேற்கும் விழாவில் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, முதல்வராக பதவியேற்று மூன்று நாட்களே ஆன நிலையில், கெஜ்ரிவால் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.