7 பேர் விடுதலை: ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் – முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

சென்னை, பிப்ரவரி-19

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் குற்றம் சாட்டினார்.

இதற்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் அளித்து பேசினர். முதல்வர் பழனிசாமி தனது பதிலில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அவர்களது விடுதலைக்காக தமிழக அரசும், தமிழக மக்களும் காத்து கொண்டிருக்கின்றனர். 7 பேர் மீது கொண்ட அக்கறையின் காரணமாகத்தான் அவர்களுக்கு பரோல் வழங்கினோம் என்றார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ‘7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையின் நிலைப்பாட்டை தமிழக அரசு ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஆளுநருடைய அதிகாரத்தில் நம்மால் தலையிட முடியாது. நல்ல முடிவை அவர் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்று தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *