மருத்துவப்படிப்பில் முறைகேடுகளா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…

சென்னை, செப்டம்பர்-25

தமிழகத்தில் எத்தனை பேர் மருத்துவப்படிப்பில் ஆள் மாறாட்டம் செய்து சேர்ந்துள்ளனர் என தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என கோவையை சேர்ந்த தீரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த சில நாட்களாக மருத்துவப்படிப்பில் முறைகேடுகள் நடப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் போன்ற மோசடி மூலமாக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனரா? எனவும் கேள்வியெழுப்பினர்.  

எத்தனை பேர் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்?  என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், மோசடி மூலம் மாணவர் சேர்க்கை பெற்றது தெரிந்தும் தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?, மருத்துவ படிப்பில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? நீட் தேர்வு எழுதியவர்கள் மற்றும் சேர்க்கைக்கு வந்தவர்களின் அடையாளங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதா? என சரமாரியாக கேள்வியை அடுக்கினர். மேலும், இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *