ஜனாதிபதியுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு: சிஏஏ-வுக்கு எதிரான கையெழுத்து பிரதிகள் ஒப்படைப்பு
சென்னை, பிப்ரவரி-19
டெல்லியில் தமிழக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பிரதிகளை வழங்கினர்.
மத்திய அரசு கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், என்.ஆா்.சிக்கு வழிவகுக்கும் என்.பி.ஆா். தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடந்த கையெழுத்து இயக்கத்தில், 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 போ் கையெழுத்திட்டனா்.
இந்நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள், சந்தித்து பேசினர். அப்போது சிஏஏ-வுக்கு எதிராக 2 கோடி பேர் கையெழுத்திட்ட கையெழுத்து பிரதிகள் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.